அஹிம்ஷா நிறுவனத்தின் முயற்சியின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மயிலம்பாவெளி கிராம சேவையாளரின் சிபாரிசுக்கு அமைய மணிகண்டன் அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி செயலக பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி கிராம சேவையாளர் பிரிவு விநாயகபுரம் கிராமத்தில் கடந்த 22 வருடகாலமாக தகர கொட்டில் ஒன்றில் 6 பிள்ளைகளைகளுடன் வறுமை கூட்டின் கீழ் வாழ்ந்து வரும் புஸ்பராஜா பாசலமர் என்ற குடும்பத்தை தலைமை தாங்கும் பெண் ஒருவரினால் அஹிம்ஷா நிறுவனத்தின் தலைவர் விநாயகமூர்த்தி விஜயராஜாவின் கவனத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மணிகண்டன் அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் 10 இலட்சம் ரூபா நிதியில் வீடு நிர்மாணிக்கப்பட்டு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது .
அஹிம்ஷா நிறுவனத்தின் தலைவர் விநாயகமூர்த்தி விஜயராஜா தலைமையில் நடைபெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ.கருணாகரன் , ஏறாவூர் பொலிஸ் உதவி பொலிஸ் அதிகாரி எ. எச். எ ,காரியப்பர் , மயிலம்பாவெளி கிராம சேவையாளர் எ. பாலகிருஷ்ணன் , அஹிம்ஷா நிறுவனத்தின் செயலாளர் டி .ராஜ் மோகன் , ஆகியோர் கலந்து கொண்டு சுபவேளையில் வீடு திறந்து வைக்கப்பட்டு வீட்டுக்கான ஆவணமும் கையளிக்கப்பட்டதுடன் ,நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன .
அஹிம்ஷா நிறுவனத்தின் முயற்சியின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவில் அஹிம்ஷா நிறுவனத்தின் 54 வீடாகவும் மணிகண்டன் அறக்கட்டளையின் முதலாவது வீடாகவும் நிர்மாணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது