திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில், இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் வீட்டின் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
முன் பகையின் காரணமாக தாக்குதல் இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.