வீதிகள் புனரமைக்கப்படவில்லையா? இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கிராமங்கள் தோறும் அதிரடி ஆய்வு

0
81

மட்டக்களப்பு மண்டூர் பகுதிக்கு இன்று விஜயம் செய்த வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், அப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய வீதி
அபிவிருத்திகள் குறித்து பிரதேச மக்களிடம் கேட்டறிந்தார்.
மண்டூர், தம்பலவத்தை, உள்ளிட் பல கிராமங்களுக்கு அவரது இணைப்பாளர்களுடன் விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் கிராமங்களில் மிகவும் அவசியமாக முன்னுரிமை
அடிப்படையில் புனரமைப்புச் செய்யப்பட வேண்டிய வீதிகள் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், அவ்வீதிகளையும் பார்வையிட்டார்.
அப்பகுதியில் வருடாந்தம் வெள்ள அனர்த்தினால் பாதிப்புறும் வீதிகளையும், மக்கள் அதிகளவு பயன்படுத்தும் இதுவரையில் புனரமைப்புச் செய்யாமலுள்ள வீதிகளையும்
செப்பனிடுவதற்கு தான் முயற்சிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்; அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.