வெதுப்பக உற்பத்திகளின் விலை 5 முதல் 10 ரூபாயால் அதிகரிப்பு

0
297

பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வெதுப்பக உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்ப உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெதுப்பக உரிமையாளர்களால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பனிஸ் உட்பட அனைத்து உற்பத்திகளும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.