சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வருவதை அடுத்து வெதுப்பக உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறையின்படி, பாண் உட்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளமையால், பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலையை அதிகரித்தால் இயல்பாகவே வெதுப்பக தொழில் பாதிக்கப்படும்.
எனவே இந்த அனைத்து காரணிகளின் விளைவாக வெதுப்பகப் பொருட்களின் விலை உயர்வை தவிர்க்கமுடியாது.
எனினும் அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.