வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0
105

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், போதியளவு நீரைப் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.