வெருகலம்பதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
254

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது
பாடசாலையின் அதிபர் திரு.சித்திரவேல் கமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

தரம் 6 தொடக்கம் 9 வரையான மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்திற்கு ஆசிரியர் ஒருவர் இல்லாமையினால் கடந்த சில வருடங்களாக பாடசாலை பழைய மாணவி ஒருவரினால் தற்பொழுது விஞ்ஞான பாடத்தினை கற்பித்தல் முன்னேடுக்கப்படுகின்ற து இருந்த போதிலும் அது எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்று தெரியவில்லை என அதிபர் கருத்து தெரிவித்தார்

இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது கிராமங்களில் உள்ள இடங்களை அவர்களின் பிரதேச பாடசாலைகளைத் தேடி அவர்களது கல்வியில் அக்கறை காட்டி மாணவர்கள் வறுமையின் காரணமாக மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகாமல் அவர்களை பாடசாலைக்கு தினமும் சென்று கல்வியை கற்க வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் ஓரு சமூகம் முன்னேற வேண்டுமாயின் கல்வியினாலே மட்டுமே முடியும் என்பதற்காக இணைந்த காரங்கள் ‘ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்’ எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக மாணவர்களின் எண்ணங்களில் இதனை விதைத்துள்ளது.

நிகழ்வில் பாடசாலையின் ஆரியர்களான திரு.நா. அன்பழகன், திரு.த. தவருபன் மேலும் அமைப்பின் உறுப்பினர்களான திரு.எஸ்.காந்தன், திரு.சி.துலக்சன், திரு. நா. சனாதனன் ஆகியோரினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.