வெற்றி பெற்ற மாணவர்களை
பாராட்டி வரவேற்கும் நிகழ்வு

0
189

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டவிளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்களை பாராட்டி வரவேற்கும் நிகழ்வு அதிபர் சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் 20 வயதின் கீழ் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் தியாகராசா டிலுஜன் மூன்றாம் இடத்தையும், 18 வயதின் கீழ் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் மேகரன் கதுஸ்கர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

வலயத்திற்கும், கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்ததும் மாணவர்கள் பிரதானவீதியில் இருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பாடசாலை சமூகம், கிராமமக்களால் பாராட்டிகௌரவிக்கப்ட்டனர்.

அதில் பிரதி அதிபர்களான செந்தில்குமார், சுரேஸ்குமார், உட்பட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.