வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்க கோரி போராட்டம்!

0
209

வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை மீள நாட்டிற்கு அழைத்துவருமாறு கோரி, கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ஓமான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்று சிக்கியிருக்கும் பெண்களை நாட்டிற்கு மீள அழைத்துவருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

போராட்டத்தில், வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.