அக்கரைப்பற்றில் கடந்த இருவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸஹி தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு
பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்