வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

0
87

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசத்தில், வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாங்களில் தங்கியுள்ள மக்களை,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் சந்தித்தார்.
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பணிப்புரைக்கமைய, பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, தீர்க்கும் முகமான
இச் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
மாஞ்சோலை ஏறாவூர் எல்லை கிராமத்தின் மணிமண்டபத்தில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உலருணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகளும்
ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில், வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள்
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பணிப்புரைக்கு அமைவாக ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையினால் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் பற்குணம் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஏறாவூர் நகர் பிரதேசத்திற்குட்பட்ட 15 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.