வெள்ளி , சனி , சந்திரன் ஆகிய கோள்கள் மிக அருகில் தோன்றும் அரிய காட்சியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) இலங்கை மக்களுக்கு காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கிழக்கு வானில் இந்த அரிய காட்சியை காணமுடியும் என கிரகவியல் ஆய்வாளர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, மக்கள் அந்தக் காட்சியை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.