மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுபத்தின காட்டுப் பகுதிக்கு வேட்டைக்குச் சென்ற இளைஞரொருவர்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ரகுமத் நகர் நாவலடியைச் சேர்ந்த 31 வயதுடைய அப்துல் காதர் முஹமட் என அடையாளங்காணப்பட்டுள்ளது.
வேட்டைக்கு நண்பரொருவருடன் சென்றதாகவும், இதன்போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த நபரின் நண்பரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.