பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பலதீனப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர் வேதன முரண்பாட்டிற்கு எதிரான போராட்டத்தின் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது எனச் சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின், ஆனாலும் இந்த விடயத்தில் அவர்கள் அக்கறையுடன் செயற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.