பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூறும் வகையில் ‘வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் ஹட்டனில் விசேட நிகழ்வு இடம்பெற்றது.
மலையக சமூக செயல் நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாடு செயற்றிட்டத்தின் அனுசரணையில் பெருந்தொட்ட பிரஜைகள் மத்தியில் தேசிய மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் எனும் விடயப்பொருளுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர், சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அருட்கலாநிதி எஸ்.சந்துரூ பெர்னாண்டோ, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்திட்ட பிரதிப் பணிப்பாளர் மா.திருநாவுக்கரசு உட்பட பல உயர் அதிகாரிகள், பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.