தமிழ்தேசத்தின் நிரந்தர தீர்விற்காக, தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் ஆரம்பித்த தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
பேராட்ட களத்திற்கு வந்த தமிழ் கட்சித் தலைவர்கள், அவரது கோரிக்கையை ஏற்று, ஓரணியில் இணைந்து செயற்படுவதாக எழுத்து மூல உறுதிமொழி வழங்கியிருந்தனர்.
அதனையடுத்து மக்களும் அவரது கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி, அவரது உணவுதவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு கோரியதையடுத்து போராட்டம் நிறைவுக்கு வந்தது.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட கட்சித்தலைவர்கள், தமிழ்தேசத்தின் நிரந்தர தீர்விற்காக, தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணைக்கும் செயற்பாடு ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் அதன் அறிவிப்பு வரும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.