வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பம்!

0
15

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனைய ஊழியர்கள் இன்று காலை வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்ததாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வரி பிரச்சினைக்காக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளார்கள்.

இந்தப் போராட்டம் காரணமாக, முனையத்தின் செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் துறைமுக நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.