வைத்தியர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்க வேண்டும் – வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம்

0
161

வரிவசூலிப்பு சட்டம் சாதாரணமாக மாற்றப்படும் வரையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரிவசூலிப்பு சட்டத்தால் வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்த அரசாங்கமானது, தொழில்வல்லுனர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதில்லை. தன்னிச்சையான முடிவுகளை எடுக்கின்றது. இந்த முடிவுகள் சகல தரப்பினரையும் பாதிப்பதாக அமைந்துள்ளது.

எனவே, வரிவசூலிப்பு சட்டம் சாதாரணமாக மாற்றப்படும் வரையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் தொடரும்.