ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக விசேட போக்குவரத்து சேவைகள்

0
47

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் இணைந்து அதிகமாகப் பேருந்து மற்றும் தொடருந்துகளை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளன.

அதன்படி .கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இரண்டு தொடருந்துகள் மேலதிக சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு,நாட்டின் பல பகுதிகளிலிருந்து கண்டிக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 150 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.