இஸ்ரேல்- ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போர் 6-வது நாளாக நீடித்து வருகின்றது. ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தரை வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசாங்கம் காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த போரில் இரு தரப்பிலும் சேர்த்து கிட்டதட்ட 3,600 பேர் உயிரிழந்துள்ளனர்.