உடல்நல குறைவால் உயிரிழந்த நெதுன்கமுவே ஹஸ்தி ராஜாவின் உடலை தேசிய அருங்காட்சியக திணைக்களம் தமது பொறுப்பில் எடுத்துள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த உற்சவத்தில், புனித சின்னத்தை ஏந்தி செல்லும் பிரதான யானையாக ஹஸ்தி ராஜா யானை காணப்பட்டது.
இந்த யானை கடந்த 7ஆம் திகதி திடீரென உயிரிழந்தது.
இதனையடுத்து குறித்த யானையின் உடலை தேசிய பொக்கிஷமாக அறிவித்து, பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்தார்.
யானைக்கான இறுதி மத அனுஷ்டானங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, தேசிய அருங்காட்சியக திணைக்களம், யானையை தமது பொறுப்புக்கு எடுத்தது.