10ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று முற்பகல் 10:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கன்னி அமர்வின் போது சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
முற்பகல் 11:30 மணியளவில் ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் அடுத்த அமர்விற்காக ஒத்திவைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மு.ப 9.00 மணிக்கு நாhளுமன்ற வளாகத்திற்கு வருகைதருமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வரும்போது உறுப்பினர்களின் வாகனங்கள் பொலிசாரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களின் கூடங்களில் நுழைவதுடன் வாக்கழைப்பு மணியோசை அடிக்கும் வரை அங்கு தங்கியிருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதத்துடன் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்றத்துக்கான பதிவுகளும் நேற்று இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வு தொடர்பான ஒத்திகையும் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.