100நாட்கள் செயல்முனைப்
போராட்டத்தின் 55வது நாள்

0
152

வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல் முனைப் போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 55 வது நாளான நேற்று காரைதீவில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை. நாட்டுக்குள் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கின்றோம். மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். 13வது திருத்தச் சட்டமானது அரசியல் அமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது போன்ற கோரிக்கைகளை முன்னிருத்தப்பட்டன.

வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் கிராம அடிப்படை அமைப்புக்கள் விவசாய மீனவ சங்கங்கள் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் மாணவ அமைப்புக்கள் சிவில் அமைப்புக்கள் என்ப ஒன்றினைந்து இவ் பேரணியை நடாத்தின.