21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13வது திருத்த சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் என்ற திருத்தம் 21வது திருத்த சட்டத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட
21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13வது திருத்த சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் என்ற திருத்தம் 21வது திருத்த சட்டத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலரும் 21வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்படுவதுடன் அந்த சட்ட திருத்தின் குழுவில் தாங்களும் உள்ளதாக பெருமையாக சொல்லிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாகாணத்திற்கு காணிஇநிதி அதிகாரங்கள் வழங்காமல் எந்த திருத்த சட்டமூலத்தினையும் கொண்டுவருவதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.