140 கோழிப் பண்ணைகள் மூடப்பட்டன!

0
147

நாடு முழுவதும் இதுவரை 140 கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோழி தீவன தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு கோழிப் பண்ணைகள் மூடப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண துரித திட்டங்கள் வகுத்து, கால்நடை அபிவிருத்திக்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்த வேண்டும் அல்லது மூடப்பட்ட கோழிப்பண்ணைகளை மீண்டும் திறக்க வேண்டும் என கால்நடை துறை அதிகாரிகளிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.