1444 இஸ்லாமிய புதுவருடத்தினை சிறப்பிக்கும் முஹர்ரம் விழா

0
175

மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி தெற்கு ஹிஸ்புல்லாஹ் பாலர்பாடசாலையில் முஹர்ரம் 1444 இஸ்லாமிய புதுவருடத்தினை சிறப்பிக்கும் முஹர்ரம் விழா பாடசாலை வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.

பாலர்பாடசாலையின் தலைவர் எம்.ஐ.எம்.அஸ்மின் ரியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இதன் போது புதிய காத்தான்குடி தெற்கு ஹிஸ்புல்லாஹ் பாலர்பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் காத்;தான்குடி சிறுவர் இல்ல மாணவர்களின் கம்படி நிகழ்வும் நடைபெற்றது

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் பாடசாலை பைகள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான ரஊப் ஏ மஜீட், எம்.ஐ.எம்.ஜவாஹிர் உட்பட முக்கியஸ்தர்கள் பாலர்பாடசாலை நிருவாகிகள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.