ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விசேட வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று மாலை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
கல்குடா ஊடக அமையத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் முகமட் பாரிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் பிராந்திய சுகாதார பணிப்பாளர் என்.சுகுணன்,கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்திக்கான பணிப்பாளர் என்.தனஞ்சயன் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌபர் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல்வேறு துறைகளில் மக்கள் சேவையாற்றிய சமூக ஆர்வலர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பாராட்டு வாழ்த்து மடல்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 15 பேர்களுக்கான நலன்புரி விசேட கொடுப்பனவு தலா 10ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. இது வரை மாவட்டத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் 45 பேருக்கு இக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
இவ் மனித நேய உதவியினை புலம்பெயர் நாட்டில் வசிக்கும் வாமதேவன் தியாகேந்திரன் வழங்கினார்.