156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு
மட்டு.களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கிரிக்கட் போட்டி

0
273

இலங்கையின் 156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கட் விளையாட்டு போட்டி களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி வாஞ்சி விளையாட்டுக்கழகம், பொலிஸ் அணி, விசேட அதிரடிப்படை அணி, மற்றும் பட்டாபுரம் லக்கி ஸ்றார் விளையாட்டுக்கழகம் என்பன கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்றன.

5 ஓவர்களையும், அணிக்கு 8 பேரையும் கொண்டதாக இச் சுற்றுப்போட்டி நடைபெற்றது.

பொலிஸ் அணியும், பட்டாபுரம் லக்கி ஸ்றார் அணியும் மோதிக் கொண்ட இறுதிப்போட்டியில் பொலிஸ் அணியைத் தோற்கடித்து பட்டாபுரம் லக்கி ஸ்றார் அணி வெற்றியீட்டியது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபயவிக்கிரவின் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்ததுடன், இவ்விளையாட்டு விழாவானது பொலிசாருக்கும், மக்களுக்குமிடையில் நல்லுறவை எற்படுத்தியுள்ளதாக இவ்விளையாட்டைப் பார்வையிட வந்திருந்த மக்கள் தெரிவித்தனர்.