கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜா-எலவைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 17ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்தவரே இன்று உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தோற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த நான்காவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.