20 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு

0
155

சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள், சாவகச்சேரிப் பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டிருப்பதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரிப் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில், டிப்பர் வாகனமொன்றை சோதனை செய்தபோது, மரக்குற்றிகளை ஏற்றி அதன் மேல் கற்களை பரவி மரக்குற்றிகளை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.