பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச தாதியர்கள் உள்ளிட்ட 20 தொழிற்சங்கங்கள் இன்று (3) பகல் 12 மணிமுதல் 12.30 வரை அரை மணித்தியாலப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
நாட்டில் சாதாரண மக்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்னர்.
எவ்வாறாயினும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் சேவையாளர்கள், இந்தப் பணிப்பகிஷ்கரிபில் ஈடுபடு போவதில்லை என்று, அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய மேலும் தெரிவித்தார். ‘சுகாதார பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பைக் கோரவில்லை. களத்தில் நின்று பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தையே கோருகின்றனர்’ என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே தாதியர்கள், சுகாதார பிரிவினர் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உரிய தரப்பினர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார ஊழியர்களுக்கு ‘என் 95’ முகக்கவசத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்