அக்கறைப்பற்று திருக்கோவில் வலய ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிகாரி கி.கங்காதரன் தலைமையில் கோட்ட மட்ட தமிழ் மொழிதினப் போட்டி- 2022 இன்று இடம்பெற்றது.
இன் நிகழ்வில் திருக்கோவில் வலய ஸ்ரீP இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் டேவிட் அமுர்தலிங்கம் அவர்களும்,தமிழ் பாட உதவி கல்விப் பணிப்பாளர்கள், அழகியல் பாட ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவிகளின் இசை நிகழ்ச்சிகள் பாடல்கள்; நடனங்கள்,பேச்சுப்போட்டிகள் இடம் பெற்றதுடன் ஆசிரியர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.