2022 புதுவருடத்திற்கான கைவிசேட கொடுக்கல் வாங்கல் முன்னெடுப்பு

0
136

சமுர்த்தி சமுதாய அடிப்படை அபிவிருத்தி வங்கியின் 2022 சித்திரை புதுவருடத்திற்கான கைவிசேட மற்றும் கொடுக்கல் வாங்கல் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சகல சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியந்தீவு சமுர்த்தி அடிப்படை வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி உத்தியோகத்தர்களுக்கான கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் வாடிக்கையாளர்களின் கொடுக்கல் வாங்கல் நிகழ்வுகள் வங்கி முகாமையாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வாடிக்கையாளர்களை மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கைவிசேடத்தினை வழங்கி கொடுக்கல் வாங்கல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

2022 சித்திரை புதுவருடத்திற்கான கைவிசேட மற்றும் கொடுக்கல் வாங்கல் நிகழ்வில் வங்கி முகாமையாளர் மணிவண்ணன் ,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே .பராமலிங்கம் ,சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் ,வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.