32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையே இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கம்!

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தாம் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் வாக்களிப்பில் இருந்து விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கு நிவாரணம் வழங்க தாம் முன்வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சாதக மற்றும் பாதக அம்சங்களைக் கொண்டுள்ளது.
சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையே இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர் என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள தவறுகளையும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி மக்களுக்காக முன்னிறுத்தி அவர்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையில் செயற்படுவது எமது கடமையாகும்.
மேலும், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டம் எதுவும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles