29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

2023 ஆம் ஆண்டுக்கான இறுதி மாவட்ட
பல் சமய ஒன்றியத்தின் கலாசார நிகழ்வு

‘சமயங்கள் நமக்காக நாம் சமூகத்திற்காக ‘ பல் சமயங்கள் சங்கமிக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் கலாசார நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தில் அனுசரணையில் ‘ சமயங்கள் நமக்காக நாம் சமூகத்திற்காக ‘ பலசமயங்கள் சங்கமிக்கும் கலாசார நிகழ்வு மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் எ .ஜேசுதாசன் தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது .

மங்களவிளக்கேற்றப்பட்டு தமிழ்மொழி வாழ்த்து பாடலுடன் சர்வ மதத்தலைவர்களின் ஆசி செய்திகளுடன் ஆரம்பமான மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் கலாசார நிகழ்வில் பல் சமய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான பரிசு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன .

‘ சமயங்கள் நமக்காக நாம் சமூகத்திற்காக ‘ எனும் தொனிப்பொருளில் பல சமயங்கள் சங்கமிக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் , மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் , மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்துகொண்டனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles