ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு, நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியமைக்கு, வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின்போதே ஆளுநர் இதனைக் குறிப்பிட்டார்.