அம்பாறை செனரத் சோமரத்தன டெனிஸ் மைதானத்தில், டெனிஸ் வளாகம்!

0
84

அம்பாறை செனரத் சோமரத்ன டெனிஸ் மைதானத்தில், புதிய டெனிஸ் வளாகத்திற்கான அடிக்கல்லை, கிழக்கு மாகாண
ஆளுநர் நாட்டி வைத்தார்.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ, கிழக்கு மாகாண உள்ளூராட்;சி
ஆணையாளர் எம்.மணிவண்ணன், அம்பாறை மாநகர உதவி ஆணையாளர் கமல் நெத்மினி ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
செனரத் சோமரத்ன டென்னிஸ் மைதானத்தில், கடந்த 22ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடாத்தப்பட்ட டெனிஸ் போட்டியில், வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கு
வெற்றிக்கிண்ணங்களும், சான்றிதழ்களும் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.