20க்கு ஆதரவளித்தவர்களை வெளியேற்ற ஐ.ம.க. முடிவு!

0
262

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வௌியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக மேலும் மூன்று யோசனைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக என தெரிவித்தார்.