225 எம்.பிக்களில் எவரையும் இணைத்து அரசியல் கூட்டணியில்லை:ஜனக ரத்நாயக்க!

0
101

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் எவரையும் இணைத்து கொண்டு அரசியல் கூட்டணி அமைப்பதில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தாமும், ஒன்றிணைந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பும் இவ்வாறு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொதுமக்கள் நிராகரித்துள்ளனர்.
எனவே அதில் ஒரு அங்கமாக இருக்க தாம் விரும்பவில்லை என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.