23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்பு?

0
85

வவுனியா- சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது, நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த யுவதி தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக, சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிக்குளம் – சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.