234வது மாதாந்த முழுநிலா நிகழ்வு

0
67

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 234 வது மாதாந்த முழுநிலா நிகழ்வு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது மருதூர் வேலனின், பைந்தமிழ்ச் சோலை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தக முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.விமலேந்திரராசா, பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.துஜான், மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.