குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான 24 மணி நேர சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
குறித்த 24 மணி நேர சேவையானது, ஒரு நாளில் கடவுச் சீட்டு வழங்கும் சேவைக்கு மட்டுமே வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
அந்த சேவைக்கான பதிவு வாரத்தில் திங்கள் காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி வரை மட்டும் மேற்கொள்ள முடியுமென குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.