243வது இலங்கை காலாற்படையின் ஓராண்டு நிறைவையொட்டி பிராத்தனை நிகழ்வுகள் இன்று மாலை மட்டக்களப்பு காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப்பள்ளிவாயலிலும்
காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலிலும் இடம்பெற்றன.
பிரார்த்தனையில், மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் 243வது இலங்கை காலாற்படையின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க கலந்து கொண்டதுடன்
கல்லடி இராணுவ முகாம் தலைமை நிர்வாக அதிகாரி லெட்டினன்; கேணல் வீரசிங்க உட்பட இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப்பள்ளிவாயலில் அதன் தலைவர் கே.எல்.எம்.பரீட் தலைமையில்; நடைபெற்ற நிகழ்வில் பள்ளிவாயலின் இமாம் அஸ்ஸெய்ஹ் இல்ஹாம்
பலாஹி விசேட பிராத்தனையை நடாத்தினார்