இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆரம்பித்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.
முல்லைத்தீவு வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கிடையில் கடந்த 12 ஆம் திகதி இடமபெற்ற முரண்பாட்டைத் தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், இ.போ.ச. சாரதி மீதும் நடத்துநர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உரிய நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தப்படாமையே இந்த முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் எனவே தமக்கான உரிய நேரங்களை வழங்கி மக்களுக்கான சேவைகளை சரியாக வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் இந்த கால வரையறையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.