40 இலட்ச ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது

0
149

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 54 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், குறித்த கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்ல அவர் தயாராக இருந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவே சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.