26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

50வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான
எலும்பு ஆரோக்கிய மருத்துவ முகாம்

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான எலும்பு ஆரோக்கிய சோதனை இலவச மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திர லயன்ஸ் அரிமா கழகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடந்தோறும் முன்னெடு வரும் செயல்திட்டத்தின் கீழ் கல்வி ,சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் போன்ற பல சமூக நலன் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .

இவ்வாண்டுக்கான செயல்திட்டமாக மருத்துவ முகாம்களை முன்னெடுத்துள்ளது அந்தவகையில் இவ்வருடத்திற்கான செயல் திட்டமாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான எலும்பு ஆரோக்கிய இலவச மருத்துவ முகாம் மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளன

அந்தவகையில் மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திர லயன்ஸ் அரிமா கழக உறுப்பினரும் வைத்தியருமான லயன் முருகமூர்த்தி வைத்தியரின் ஒருங்கிணைப்பில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான எலும்பு ஆரோக்கிய சோதனைக்கு அமைவாக கை ,கால் விறைப்பு உள்ளவர்களுக்கான நரம்பு ஆரோக்கிய சோதனைகளும் வைத்திய ஆலோசனைகள் இன்றையதினம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles