

2022 ஆண்டுக்கான 74 ஆவது அகில இலங்கை ஆணழகன் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
நேற்று கொழும்பு மருதானையில் குறித்த போட்டி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது 45 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கணேசமூர்த்தி சங்கர் கணேஷ் முதலிடத்தை பெற்றுள்ளார்.