75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சூழல் நேய பசுமை வேலைத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காலமதி பத்மராஜாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு கல்லடி டச் பார் கடற்கரையை
அண்டிய பிரதேசத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சிரமதானப் பணியில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மாநகர சபை ஊழியர்கள்
மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் யுவதிகள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.