80 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

0
303

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்கு கடத்தப்பட்ட போதைப்பொருளே இவ்வாறு கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் ‘குஷ்’ எனப்படும் வகையை சேர்ந்த போதைப்பொருள் என சுங்க திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

1200 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 80 இலட்சம் ரூபா என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.