83 இலட்சம் பணமோசடி செய்தவருக்குப் பிணை வழங்கியது நீதவான் நீதிமன்றம்!

0
222

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இராஜகிரிய, கலப்பலுவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ருமேனியாவில் தொழில்வாய்ப்பு வழங்குவதாக 813,000 ரூபாவைப் பெற்று, வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கப்படவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்ததாகவும், அதன்படி குறித்த நபரை பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக சந்தேகநபருக்கு எதிராக பணியகத்திற்கு 9 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த முறைப்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபரை கடுவலை நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுவித்த பணியகம், அவர் 8,390,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.